குட் பேட் அக்லி
அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி படத்திற்கு பிறகு விரைவில் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா என பலர் நடித்துள்ள இப்படத்தை புஷ்பா 1, 2 படங்களை தயாரித்து வெற்றிக்கண்ட சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல்களின் வீடியோவும் வெளியாகி இருந்தது.
டிரைலர்
படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் அதிரடியாக நேற்று ஏப்ரல் 4ம் தேதி வெளியாகி இருந்தது. அஜித் படத்தின் டிரைலர் ரிலீஸ் என்றால் சும்மாவா, செம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
நிலா செய்த காரியம் கண்ணீர் விட்டு அழுத பல்லவா.. அய்யனார் துணை எமோஷ்னல் புரொமோ
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் பிரபலம் பாடியுள்ளாராம். அவர் வேறுயாரும் இல்லை, நிக்சன் தான்.
இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து தனது வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
