விஜய் டிவி பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது 70 நாட்களை கடந்து பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வழக்கம் போல சண்டை சச்சரவு வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகர் தீபக் பிக் பாஸ் 8ல் போட்டியாளராக இருக்கிறார். தற்போது அவர் பெயரில் ஒரு போலியான விஷயம் நடப்பதாக பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் புகாரை கூறி இருக்கிறார்.
போலி PR?
தீபக்கிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் போலியான PR நடப்பதாக ஸ்ரீகுமார் புகார் கூறி இருக்கிறார்.
வழக்கமாக பணம் கொடுத்து influencerகள் மூலமாக நடத்தப்படும் இந்த PR நடந்தால் அதை வைத்து அந்த போட்டியாளரை அதிகம் ட்ரோல் தான் நெட்டிசன்கள் செய்வார்கள்.
இந்த நிலையில் தான் ஸ்ரீகுமார் இப்படி ஒரு புகாரை கூறி இருக்கிறார்.