சின்னத்திரையில் பிரபல நடிகராக இருந்தவர் தினேஷ். அவர் பிக் பாஸ் ஏழாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
அவர் நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாகி பிரிந்துவிட்டனர்.
சமீபத்தில் நடிகர் தினேஷ் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அது உண்மை இல்லை, நான் விசாரணைக்காக மட்டுமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன் என அவர் அப்போதே விளக்கம் கொடுத்தார்.
உஷாரா இருங்க
இந்நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட FIR ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தினேஷ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
நான் தாக்குதல் நடத்தியதாக ஒருநபர் போலியாக புகார் கொடுத்திருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரத்தில் நான் ஒரு வழக்கின் விசரணைக்காக நீதிமன்றத்தில் நீதிபதி முன் நின்று கொண்டிருந்தேன். அதை ஆதாரத்துடன் நிரூபித்ததால் போலீஸ் உண்மையை ஏற்றுக்கொண்டு இருக்கிறது என தினேஷ் கூறி இருக்கிறார்.
மேலும் மற்றவர்களுக்கும் தினேஷ் அட்வைஸ் கூறி இருக்கிறார். “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என எப்போதும் ஒரு ஆதாரம் வைத்துக்கொள்ளுங்கள், போனில் லொகேஷன் ஹிஸ்டரி ஆன் செய்து வையுங்கள், எங்கு போனாலும் போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள், காரில் dashcam ஆன் செய்து வையுங்கள். அப்போது தான் இப்படி பொய் புகார் வந்தால் சட்டப்படி உங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்” என தினேஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.
