பிக் பாஸ்
கமல் ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் 2017ஆம் ஆண்டு தமிழில் துவங்கியது. இதன்பின் தொடர்ந்து 7 சீசன்களை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8-வது சீசனில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல் அறிவித்தார்.
அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி, சீசன் 8-ஐ தொகுத்து வழங்கி வருகிறார். 77 நாட்கள் பிக் பாஸ் 8 கடந்துள்ள 12 போட்டியாளர்கள் தற்போது வீட்டிற்குள் உள்ளனர். கடந்த வாரம் ரஞ்சித் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
பிக் பாஸில் இருந்து வெளியேறிய ரஞ்சித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா! இதோ
இன்னும் சில வாரங்களே பைனலுக்கு இருக்க, யார் அந்த வெற்றியாளர் என்கிற பேச்சு எழுந்துள்ளது. அதே போல், ஒவ்வொரு சீசன் நடக்கும் பொழுதும், யார் இந்த பிக் பாஸ், இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார், என பல கேள்விகள் கேட்கப்படும்.
பிக் பாஸ்-க்கு குரல் கொடுப்பவர்
இந்த நிலையில், பிக் பாஸ்-க்கு குரல் கொடுப்பவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சாஷூ சதிஸ் சாரதி. இவர் நடிகரும், commentary செய்வதிலும் ஆர்வம் கொண்டவராம். இவர் தான் பிக் பாஸ் தமிழுக்கு குரல் கொடுத்து வருகிறாராம்.
தினமும் வீட்டிற்குள் பேசும் குரலுக்கு சாஷூ சதிஸ் சாரதி தான் சொந்தக்காரர் என தெரியவந்துள்ளது. அவர் பேசிய வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..