Home சினிமா பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்..உறுதிப்படுத்திய போன சீசன் போட்டியாளரின்...

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்..உறுதிப்படுத்திய போன சீசன் போட்டியாளரின் தந்தை

0

பிக் பாஸ்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பெண்கள் மற்றும் ஆண்கள் என இரண்டு பக்கமாக பிரித்து நடத்தப்படும் இந்த சீசனில் முதல் வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அரண்மனை 5 குறித்து வெளிவந்த தகவல் பொய்யானது.. நடிகை குஷ்பு வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

ரவீந்தரை தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் இறுதியில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இதுவரை வெளியேறிய இருவரும் ஆண்கள் அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, அன்ஷிதா, சத்யா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ள இருந்த நிலையில், போட்டியாளர்களில் யார் வெளியேறப்போகிறார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

பெண் போட்டியாளர்

நாமினேட் ஆகியுள்ள 7 போட்டியாளர்களில் ஜாக்குலின், அன்ஷிதா அல்லது தர்ஷா குப்தா இந்த மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த வாரம் தர்ஷா குப்தா வெளியேற போவதாக கூறி போன சீசன் போட்டியாளராக இருந்த ஐஷுவின் அப்பா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தைரியமாக இரு தர்ஷா உன் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version