Home சினிமா எதுவுமே எளிது கிடையாது.. விஜய் அரசியல் வருகை குறித்து பிக் பாஸ் பிரபலம் யாஷிகா கருத்து

எதுவுமே எளிது கிடையாது.. விஜய் அரசியல் வருகை குறித்து பிக் பாஸ் பிரபலம் யாஷிகா கருத்து

0

யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்தது. 

தற்போது, படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகா நடிப்பில் கடைசியாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது.

உங்களை முதலில் சந்தித்த தருணம்.. கணவர் சுந்தர். சி குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ

எளிது கிடையாது

இந்நிலையில், திருச்சியில் ஒரு தனியார் நகைக்கடையில் நடந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை யாஷிகா கலந்துகொண்டார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாஷிகாவிடம், விஜய் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அவருக்கு என் வாழ்த்துகள், எதுவுமே இங்கு எளிது கிடையாது.

ஒரு விஷயத்திற்காக மற்றொரு விஷயத்தை விட்டுதான் செல்ல வேண்டும். அரசியலுக்காக சினிமாவை விட்டு வருவது நல்ல விஷயம் தான்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version