Home இலங்கை அரசியல் நிகழ்நிலை காப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் : வெளியான வர்த்தமானி

நிகழ்நிலை காப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் : வெளியான வர்த்தமானி

0

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நிகழ்நிலை காப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிநபர் சட்டமூலம்

நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பான ஏதேனும் விதிமுறைகள் நடைமுறையிலிருந்தால், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அந்த விதிமுறைகள் அனைத்தும் ரத்தாகும் என சுட்டிக்காட்டப்ப்படுகிறது.

இந்த சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் (Ravi Karunanayake) தனிநபர் சட்டமூலமாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version