பில்லா
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் பில்லா.
இப்படம் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பில்லா படத்தின் ரீமேக் என்பதை நாம் அறிவோம்.
சினிமாவில் 22 ஆண்டுகள் நிறைவு.. த்ரிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு
அஜித்துடன் இணைந்து பிரபு, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த இப்படம் அருமையான விமர்சனங்களை பெற்றதோடு மாபெரும் வசூல் வேட்டையும் நடத்தியது.
அதோடு படத்தில் அமைந்த பாடல்கள் இப்போதும் ஹிட் தான். 2007ம் ஆண்டு முதல் பாகம் வெளியாக 2012ம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால், முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பு பெறாமல் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
வசூல்
இந்நிலையில், பில்லா படம் வெளியாகி இன்றோடு 17 வருடங்களை எட்டியுள்ள நிலையில் படத்தின் வசூல் விவரம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் உலா வருகிறது. அந்த வகையில், படம் மொத்தமாக ரூ. 48 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.