Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி : சஜித்தை மன்னிப்பு கேட்குமாறு கூச்சலிட்ட ஆளுங்கட்சி

நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி : சஜித்தை மன்னிப்பு கேட்குமாறு கூச்சலிட்ட ஆளுங்கட்சி

0

பிரதி சபாநாயகரிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மன்னிப்பு கோர வேண்டும் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது இடைநடுவில் பாய வேண்டாம் என பிரதி சபாநாயகரை நோக்கி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சத்தமிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட பிமல் ரத்நாயக்க “நாடாளுமன்றத்தில் நேற்று (05) ஒருவர் சபாநாயகரை நோக்கி உங்களை பார்த்து வெட்கப்படுகின்றேன் என  தெரிவித்திருந்ததுடன் மற்றும் ஒருவர் கடுமையாக பேசி இருந்தார்.

தற்போது எதிர்க்கட்சி தலைவர் தங்களை நோக்கி நடுவில் பாயாதீர்கள் என தெரிவித்திருக்கின்றார். இது நாடாளுமன்றமா அல்லது ரவுடித்தனம் செய்வதற்கான இடமா என தெரியவில்லை” என அவர் கடுமையாக கூச்சலிட்டுள்ளார்.

இதனால் சபையில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், இடையில் குறுக்கிட்ட பிரதி சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகாத வார்த்தை பிரயோகங்கள் தம்மை மட்டுமின்றி சபையையும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளதால் மன்னிப்பு கோருமாறும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர், தான் தெரிவித்த வார்த்தைகள் தவறான முறையில் பிரதிபலித்திருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/bMR15GxkRAo

NO COMMENTS

Exit mobile version