Home உலகம் அடுத்த மாதம் ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைப்பு

அடுத்த மாதம் ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைப்பு

0

தாய்லாந்தில் (Thailand) அடுத்த மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு அமைப்பு

பிம்ஸ்டெக் என்பது தெற்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகள் அடங்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை (Sri Lanka), இந்தியா (India), மியன்மார் (Myanmar), பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் பூட்டான் (Bhutan) ஆகிய நாடுகள் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/bimstec-conference-postponed-1724534599

NO COMMENTS

Exit mobile version