Home இலங்கை அரசியல் நாட்டில் மீண்டும் இரத்தக்களரி வெடிக்கும்…எச்சரித்துள்ள ஆளும் தரப்பு

நாட்டில் மீண்டும் இரத்தக்களரி வெடிக்கும்…எச்சரித்துள்ள ஆளும் தரப்பு

0

அனுரகுமாரவின் கும்பல் நாட்டில் அதிகாரம் பெற்றால் நாட்டில் 2022 ஆம் ஆண்டை விட அதிக இரத்தக்களரி ஏற்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

அண்மையில், திவுலபிட்டிய, கட்டான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

நாடு முன்னோக்கி செல்லும் ஒவ்வொரு முறையும் மக்கள் விடுதலை முன்னணி நாட்டை பின்னோக்கி இழுக்கும் வகையில் செயல்பட்டதாக அமைச்சர் பிரசன்ன கூறியுள்ளார்.

எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுரவின் எதிர்பார்ப்பு

அனுரகுமார, தனது 3 வீத வாக்குகள் 40-50 வீதமாக அதிகரிக்கும் என நினைக்கின்றார் ஆனால் அவ்வாறான ஒன்று நடக்காது என்றும் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்களின் ஒரு வாக்கைப் பெறுவதற்கு நாம் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Source: https://ibctamil.com/article/bloodier-than-2022-sri-lanak-anura-s-gov-prasanna-1725004377

NO COMMENTS

Exit mobile version