Home இலங்கை அரசியல் சிறிநேசனை தாக்கினாரா சாணக்கியன்! வெளியான உண்மைகள்

சிறிநேசனை தாக்கினாரா சாணக்கியன்! வெளியான உண்மைகள்

0

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் போது  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கின் என்னுடன் மோதலில் ஈடுபட்டதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை.  அவர் என்னுடன் மோதலில் ஈடுபடவில்லை என்பதே உண்மை என்று மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் போது கடுமையான வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டதுடன்  இறுதியில் அமளி துமளியில் கூட்டம் நிறைவுபெற்றது. 

சிறிநேசன் மீதான ஏளமான சொல்லாடல்கள்..

கூட்டத்தின் போது சிறிநேசன் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிராக சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் கடுமையாக கூச்சலிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சமூக வலைத்தளங்களில் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை என்று சிறிநேசன் தற்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கூட்டத்தில், என்னுடன் சுமந்திரன் மற்றும் அவரது சகாக்களான சயந்தன், பீற்றர், ரெட்ண வடிவேல் ஆகியோரே தேவையற்ற கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

சுமந்திரனது தன்னெடுப்பான மோதல் கருத்துகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதால், மூவரும் கூட்டாக என்னுடன் மோதினர்.

அதிலும் பீற்றர் என்பவர்தான் வார்த்தைகளை வன்மமாகப் பயன்படுத்தினார்.

இவர் அடியாள் போன்று எனது வயது மற்றும் தராதரம் மறந்து செயற்பட்டார்.

சாணக்கியன் அவர்கள் பக்கமாக மௌனியாக பார்வையாளனாக இருந்தார். என்னுடன் மோதவில்லை. இதுதான் உண்மை. பொய்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போது,  பொது வேட்பாளர் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டபோது, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனை கடும் தொணியில் எச்சரித்ததுடன், அநாகரீகமான வார்த்தைகளால் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ஒருவர் உட்பட பலர் வசை பாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்துடன், சிறீநேசனை ஒருமையில் விமர்சித்ததாகவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணியின் நெருங்கிய சகாக்கள் உள்ளிட்ட சிலர் அவர் மீது ஏளனமான சொல்லாடல்களை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version