Home முக்கியச் செய்திகள் நிலவில் தரையிறங்கியது ப்ளூ கோஸ்ட் ரோவர்: அடுத்தடுத்து பூமிக்கு வரும் புகைப்படங்கள்

நிலவில் தரையிறங்கியது ப்ளூ கோஸ்ட் ரோவர்: அடுத்தடுத்து பூமிக்கு வரும் புகைப்படங்கள்

0

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் (Firefly Aerospace), அதன் ரோபோ ரோவரான ப்ளூ கோஸ்டை (Blue Ghost) இன்று (2) நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

ஜனவரி 15 ஆம் திகதி ப்ளூ கோஸ்ட் சந்திர ஆய்வுக் கலம் பூமியை விட்டுப் புறப்பட்டதுடன், அதன் கமராக்கள் பூமி சந்திரனை நோக்கி பயணிக்கும்போது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக பின்வாங்குவதைக் கூட பதிவு செய்திருந்தன.

பூமியை விட்டு வெளியேறி 384,400 கிலோமீட்டர் பயணம் செய்த பிறகு, ப்ளூ கோஸ்ட் விண்கலம் சந்திரனை நெருங்கி பெப்ரவரி 13 அன்று சந்திர சுற்றுப்பாதையில் நுழைந்ததுடன், சந்திரனைச் சுற்றி 16 நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்தது.

சந்திர சுற்றுப்பாதை

அதன்போது, சந்திரனின் வட்டமான மேற்பரப்புக்குப் பின்னால் பூமி உதயமாகி மறையும் அற்புதமான படங்களையும் விண்கலம் திருப்பி அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், பெப்ரவரி 18 ஆம் திகதி, சந்திரனில் தரையிறங்குவதற்காக விண்கலம் அதன் உந்துவிசைகளை இயக்கி, குறைந்த சந்திர சுற்றுப்பாதையில் நுழைந்தது.

விண்கலம் குறைந்த சந்திர சுற்றுப்பாதையில் நுழைந்த நேரத்தில், அது சந்திரனைச் சுற்றி இரண்டு சுற்றுப்பாதைகளை முடித்து, இன்று (2) நிலவில் தரையிறங்கியது.

புகைப்படம்

அத்தோடு, ப்ளூ கோஸ்ட், சந்திரனில் மேற்பரப்பில் இருந்து தற்போது பல புகைப்படங்களை பூமிக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், ப்ளூ கோஸ்ட்’ விண்கலத்தின் பணிகளில் அமெரிக்க நாசாவும் ஈடுபட்டுள்ளது, இருப்பினும், ப்ளூ கோஸ்டை இயக்கும் நிறுவனம் ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ் ஆகும்.

எவ்வாறாயினும், நாசாவின் அறிவியல் கருவிகள், மற்ற 10 சாதனங்கள் உட்பட, ப்ளூ கோஸ்ட் விண்கலத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன், அதில் சந்திர மேற்பரப்பை ஆராய்ந்து வரைபடமாக்க தேவையான உபகரணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version