Home இலங்கை சமூகம் புளியம்பொக்கணை சந்தி பாலத்திற்குள் இரண்டு ஆண்களின் சடலம் மீட்பு

புளியம்பொக்கணை சந்தி பாலத்திற்குள் இரண்டு ஆண்களின் சடலம் மீட்பு

0

பரந்தன் – முல்லைத்தீவு (Mullaitivu) பிரதான வீதியில் புளியம்பொக்கணை சந்தி பகுதியல்
நிர்மாண வேலைகள் இடம்பெறும் பாலத்திற்குள் இருந்து இன்று இரண்டு இளைஞர்களின்
சடலங்களும் மோட்டோர் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதன.

உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவி்ல்லை.

உடற்கூற்று பரிசோதனை

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு
வருகை தந்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலங்களை பார்வையிட்டுள்ளார். 

அத்துடன், சடலங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநெச்சி மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய
அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், சம்பவம்
விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version