Home இலங்கை குற்றம் மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்பு

0

மட்டக்களப்பு (Batticaloa) செட்டிபாளையம் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று திங்கட்கிழமை (08.07.2024) மீட்டகப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்
சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

மேலும், சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் நீதிமன்ற அனுமதியை பெற்று
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை
எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் களுவாஞ்சிக்குடி பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/body-of-a-woman-recovered-in-batticaloa-1720439880

NO COMMENTS

Exit mobile version