Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட அரச ஊழியர்!

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட அரச ஊழியர்!

0

வவுனியாவில் (Vavuniya) குளத்தின் ஆற்றுப்பகுதியில் இருந்து அரச ஊழியரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – சேமமடு குளத்தின் வான்பகுதியிலிருந்தே குறித்த சடலம் இன்றையதினம் (15.12.2024) மீட்கப்பட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை வேலிகளை பராமரிக்கும் பணி செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இந்தநிலையில் நேற்றயதினம் (14.12.2024) மாலை குறித்த இளைஞர் சேமமடு குளத்தின் ஆற்றுப்பகுதிக்கு சென்றிருந்து நீண்டநேரமாகிய நிலையில் அவரை காணாத நண்பர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது , அவரது சடலம் இன்றுகாலை குறித்த ஆற்றுப்பகுதியில் இருந்து இளைஞர்களால் மீட்கப்பட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் என்ற அரச ஊழியரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version