கொழும்பு அருகே மர்மமான முறையில் இறந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அருகே உள்ள பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலன்னவத்தை பிரதேசத்திலேயே மேற்குறித்தவாறு பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வாடகை வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலம்
அப்பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் குடியிருந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
