Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் நீதிமன்றத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்

தமிழர் பகுதியில் நீதிமன்றத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: குவிக்கப்பட்டுள்ள அதிரடிப்படையினர்

0

மட்டக்களப்பு (Batticaloa) நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்க்கப்  போவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக காவல்துறையினருக்கு கடிதம் ஒன்று இனம் தெரியாதேரால் நேற்று வியாழக்கிழமை (24) அனுப்பபட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து கட்டிடத் தொகுதியை சுற்றி நேற்று முதல் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டதுடன் அந்த பகுதியில் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று (25.10.2024) அதிகாலை 05 மணி தொடக்கம் நீதிமன்றகட்டிடத் தொகுதியில் விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் காவல்துறை மேப்பநாய் சகிதம் கட்டிடப் பகுதியை சுற்றி வெடிகுண்டை தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு சீயோன் தேவலாய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட ஸாரான் காசிம் மற்றும் ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படும் பல சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Source: https://ibctamil.com/article/bomb-threat-to-batticaloa-court-1729829754

NO COMMENTS

Exit mobile version