“மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்கவே எல்லை நிர்ணயம் தொடர்பில்
பேசப்படுகின்றது. அவ்வாறு செய்யாமல் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில்
நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்
கலந்துகொண்டு உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல மேலும்
குறிப்பிட்டதாவது,
“மாகாண சபைகளில் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுநர்கள் ஊடாகவே அவை
நிர்வகிக்கப்படுகின்றன.
மாகாண சபை தேர்தல் ஒத்திவைப்பு
மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்பதை
நாம் ஏற்கின்றோம். அன்று தவறு நடந்துள்ளது.
எனினும், அது சரிசெய்யப்பட
வேண்டும்.
பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம்.
இதற்காகச் சாணக்கியன்
எம்.பி. முன்வைத்துள்ள தனிநபர் சட்டமூலத்தை அரசு தமது சட்டமூலமாக கொண்டு
வந்து இதற்குரிய நடவடிக்கையை எடுக்கலாம். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.” –
என்றார்.
