Home இலங்கை சமூகம் யாழில் ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழில் ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (18.10.2024) யாழ். அனலைதீவில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

அனலைதீவு 05 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அனலைதீவில் உள்ள ஆலயத்தில் பாடல் ஒலிபரப்புவதற்காக மின்சார இணைப்புகளில் ஈடுபட்டபோது தவறுதலாக மின்சாரம் தாக்கியுள்ளது.

இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

45 நாட்களேயான பெண் குழந்தை 

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு சாவகச்சேரி ஆதர வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (17.10.2024) முற்பகல் 11.00 மணியளவில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://ibctamil.com/article/boy-death-in-jaffna-1729322056

NO COMMENTS

Exit mobile version