Home இலங்கை சமூகம் யாழில் கிராம சேவகருக்கு இடமாற்றம் : மக்களால் போராட்டம் முன்னெடுப்பு!

யாழில் கிராம சேவகருக்கு இடமாற்றம் : மக்களால் போராட்டம் முன்னெடுப்பு!

0

யாழ். தென்மராட்சி வரணி நாவற்காடு பிரதேச மக்கள் கிராம உத்தியோகத்தரை இடமாற்ற
வேண்டாம் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (03) முன்னெடுத்துள்ளனர்.

நாவற்காடு – கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்துள்ளார்.

நியமனம் பெற்று 6 ஆறு மாதங்கள்
பூர்த்தியாகாத நிலையில் அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

உரிய தீர்வு வழங்கப்படாத நிலை

குறித்த இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி கிராம மக்களின் கையெழுத்து மகஜர் ஒன்று
தயார்ப்படுத்தினர்.

அந்த மகஜர் அடங்கிய கோரிக்கை கடிதத்துடன் பிரதேச அமைப்புக்களின்
பிரதிநிதிகள் சாவகச்சேரி பிரதேச செயலரை சந்தித்திருந்தனர்.

எனினும் மக்களின் கோரிக்கைக்கு பிரதேச செயலரால் உரிய தீர்வு வழங்கப்படாத
நிலையில் பிரதேச மக்கள் இணைந்து தீர்வு கோரி இன்றையதினம் நாற்காடு
பொதுமண்டபத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாற்றாதே மாற்றாதே கிராம அலுவலரை
மாற்றாதே, மக்களுக்கு ஜனநாயகம் இந்த நாட்டில் இல்லையா? மேலிடம் யார்? அரசியல்
பின்னணியா? உடனடியாக அம்பலப்படுத்தவும், உடனடி இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
புதிய அரசாங்கம் வந்தவுடன் புதிய நியனமா? தீர்வு இல்லாவிடின் தொடரும்
போராட்டம் போன்ற கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://tamilwin.com/article/protest-in-jaffna-gs-transfer-1727958814

NO COMMENTS

Exit mobile version