Home இலங்கை சமூகம் யாழில் பென்சிலை எடுக்க குளத்தில் இறங்கிய சிறுவன் பரிதாப மரணம்

யாழில் பென்சிலை எடுக்க குளத்தில் இறங்கிய சிறுவன் பரிதாப மரணம்

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திருமால்புரம் வல்லிபுரம் பகுதியில் குளத்தில் வீழ்ந்த பென்சிலை எடுக்க இறங்கிய மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்றரை வயதுடைய ரஜீவன் சுஜித் என்கின்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

சிறுவன் தனது கையில் பென்சில் ஒன்றுடன் சென்றுகொண்டிருந்தபோது, அது தவறி குளத்தில் வீழ்ந்துள்ளது.

அதனை எடுப்பதற்காக குறித்த குளத்தில் சிறுவன் இறங்கியுள்ளார். இதனால் நீரில் மூழ்கியுள்ளார்.

இதன்போது உடனடியாக சிறுவனை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றவேளை, சிறுவன் ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்படுள்ளது.

பிரேத பரிசோதனை

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version