ஆறுமுகநாவலரின் 145 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுசிலையடியில் நகரசபை
செயலாளர் அ.பாலகிருபன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலுப்பையடி தரிப்பிடம்
அவர் தொடர்பான நினைவுரைகளை பாடசாலை மாணவர்களும், தமிழ்மணி அகளங்கன் ஆகியோர்
நிகழ்த்தியிருந்தனர்.
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில்
இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை
ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த சிலையானது முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் இலுப்பையடி
தரிப்பிடத்தினால் பரமாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.