Home முக்கியச் செய்திகள் தலைமுடியை வெட்டி சிறுமி மீது கொடூர தாக்குதல் : சிறிய தாய் கைது

தலைமுடியை வெட்டி சிறுமி மீது கொடூர தாக்குதல் : சிறிய தாய் கைது

0

 14 வயதுடைய பாடசாலை மாணவியை கொடூரமாக தாக்கி, தலைமுடியை வெட்டி கொடூரமாகதாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் சிறிய தாய் இன்று (5) கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியயெத்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதி

சிறிய தாயின் கொடுமையால் காயமடைந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுமியின் தாய் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணுடனும் சிறுமியுடனும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக வகுப்பிற்கு சென்று வர தாமதமானதால் தாக்குதல்

மேலதிக வகுப்பிற்குச் சென்ற சிறுமி வீடு திரும்ப தாமதமானதால் ஆத்திரமடைந்த சிறியதாய், சிறுமியை கை, கால்களால் கொடூரமாக தாக்கி, பக்கத்து வீட்டில் இருந்து கத்திரிக்கோல் கொண்டு வந்து சிறுமியின் தலைமுடியை வெட்டியதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version