Home இலங்கை அரசியல் திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுர விநியோகம்

திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுர விநியோகம்

0

Courtesy: H A Roshan

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க கோரி திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்று (25) திருகோணமலை பெரியகடை வீதியில் ஆரம்பித்து சிவன் கோயிலுக்கு முன்னால் வரையான வீதி வரை வழங்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மாவட்ட செயலாளர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கு வீதி வழியாக துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்தனர்.

கண்துடைப்பு 

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குறித்த கட்சியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந், தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் பொது வேட்பாளர் என்பது வெறும் கண்துடைப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரே பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்கின்றனர் எனவும் ஒற்றை ஆட்சி முறை இல்லாமல் ஆக்கப்பட்டு சமஷ்டி ஆட்சியை கொண்டு வரும் வரை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version