Home இலங்கை குற்றம் விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

0

கம்பஹா, பலகல்ல பகுதியிலுள்ள தற்காலிக விடுதி அறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அநுராதபுரத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரணத்திற்கான காரணம்

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் நீதவான் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் கம்பஹா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version