நாட்டில் சில பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தீபாவளிக்கு மறுதினமான 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் பாடசாலைக்கு விடுமுறை
விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சிக்கு விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21ஆம் திகதி தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்படுவதால் அதற்கு பதிலாக எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலையை நாடாத்துமாறும் மற்றும் இது சம்பந்தமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுனு ஆராச்சி கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
