Home இலங்கை குற்றம் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்!

இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்!

0

பொதுமக்களிடமிருந்து, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் இதுவரை 3,045 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

இவற்றுள் 811 முறைப்பாடுகளை விசாரணை செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதேவேளை சுற்றிவளைப்பில் 67 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 20 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/bribery-complaints-corruption-inquiry-commission-1729214506

NO COMMENTS

Exit mobile version