Home உலகம் கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்

0

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

42 வயதுடைய சாரதியான அவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

ப்ளூ வோட்டர் பாலத்தில் 120 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

ட்ரக் வழிமறிக்கப்பட்டு சோதனை

பாலத்தில் அவரது ட்ரக் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, கனடாவில் தடைசெய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கொக்கெய்ன் போதைப்பொருளை விநியோகித்த, உற்பத்தி செய்ததாக இலங்கைத் தமிழர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் பல குற்றச்சாட்டுகள் 

அவரது பிணைப்பத்திரம் 3 மில்லியன் கனடா டொலராக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் கைதான இலங்கையர் மீது விசாரணை தொடர்வதால் மேலும் பல குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version