பாரிஸ்(Paris) ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் ( Backstroke) நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் இலங்கையின் கங்கா செனவிரத்ன(Ganga Seneviratne) முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த சாதனைனைய செனவிரத்ன 1:04.26 என்ற நேரத்தை பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், முதல் சுற்றின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை முறையே மொசாம்பிக்கைச் சேர்ந்த டி. டோனெல்லி (1:08.73), துர்க்மெனிஸ்தானைச் சேர்ந்த ஏ. பிரிமோவா (1:10.17), லிபியாவைச் சேர்ந்த எம்.அல்முக்தார் (1:10.99) ஆகியோர் பெற்றுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்
இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாக கூறப்படுகிறது.
இருப்பினும், அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற அவரது இறுதி நேரம் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செனவிரத்ன மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களிலிருந்து 30 இடங்களைப் பெற்றுள்ளார்.