எங்களுடைய மக்கள் யாரிடமும் கையேந்தக் கூடாது, அவர்கள் ஒரு அவலமான வாழ்க்கையை நோக்கி நகரக் கூடாது என்பதில் ஈழத்தமிழர் ஆகிய நாம் குறியாக இருக்கின்றோம்.
அந்த வகையில், இதே குறிக்கோளில் நமது புலம்பெயர்ந்துள்ள உறவுகளும் அதிக வகிபாகத்தை கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் முள்ளிவாய்க்கால் மக்களின் மனநிலை தொடர்பான களஆய்வொன்றை ஐபிசி தமிழ் மேற்கொண்டிருந்தது.
அதன்போது, ஒரு தாய் தன்னுடைய வறுமை மற்றும் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்காக எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கூறுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், குறித்த காணொளியை கண்டு அந்த தாய்க்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய பிரித்தானியாவில் இருந்து ஒரு தம்பதி வருகை தந்துள்ளது…
https://www.youtube.com/embed/09_iWUlvxVg
