பதுளை- எல்ல பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற பிரித்தானிய பெண்ணொருவர் 50 அடி பள்ளத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குறித்த விபத்து நேற்று (18.12.2025) இடம்பெற்றுள்ளது.
அதன்படி, 32 வயதான கேத்தரின் ஆலிஸ் எனப்படும் பிரித்தானிய பெண்ணொருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
அவர், சிறிய சிவனொளிபாத மலை ஏறும் போது 50 முதல் 100 அடி வரையிலான பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
எல்ல பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒன்றில் உள்ள விசேட மீட்புக் குழுவும், எல்ல காவல்துறை அதிகாரிகளும் இணைந்து இவ்வாறு பள்ளத்தாக்கில் விழுந்து காயமடைந்த வெளிநாட்டுப் பெண்ணை மீட்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த பிரித்தானிய பெண்ணை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
