Home இலங்கை குற்றம் சகோதரியை தவறான தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

சகோதரியை தவறான தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

0

யாழில் (Jaffna) தனது சகோதரியை தவறான தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் (25.04.2024) முற்படுத்தியவேளை, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர்
தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், தனது சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில்
உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்ததையடுத்து, இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை யாழ். நகர் பகுதியை அண்டிய
பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

தமிழரசுக்கட்சியில் புதிய தேர்தல் நடந்தால் தலைவர் புதியவர்

வைத்திய சிகிச்சை

அதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை
வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் போதை ஊசிகளை செலுத்தியும் தவறான முறைக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு
உள்ளாக்கியும் வந்துள்ளது.

பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று
சகோதரன் சேர்த்துள்ளார்.

இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள்
தென்பட்டமையினாலும் உடலில் காயங்கள் காணப்பட்டமையாலும் இல்ல நிர்வாகத்தினர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு

அதனையடுத்து, சட்டவைத்திய அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ
பரிசோதனைகளின் போது, பெண் வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு
உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸாரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல்
வழங்கப்பட்டதையடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணின் சகோதரனே பெண்ணை தவறான முறைக்கு உட்படுத்தி வந்தமையும்  போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர
வைத்து தவறான தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரியவந்துள்ளது.

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டாபய வழங்கிய உயர் பதவி! அம்பலப்படுத்தும் பொன்சேகா

சீனாவின் சிவப்புக் கோடுகளை மிதிக்க வேண்டாம்: அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version