2024ஆம் ஆண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வருவாய் மீதான வரவு செலவுத் திட்ட இலக்கை விட குறைவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
இந்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை (Budget – 2024) குறித்து வெரிடே (Verité) ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“1991ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில்
நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்குக்கான வருவாயை இலங்கை
எட்டவில்லை.
இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க மரைன் இராணுவப் படை
எதிர்பார்க்கப்படும் வருவாய்
அண்மையிலும், வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான நாடாளுமன்றக் குழுவானது வரி வருவாய்
2023இல் வரவு செலவுத் திட்ட இலக்கை விட 13 சதவீதம் குறைந்துள்ளதாக
தெரிவித்தது.
2024இல், அரசாங்கம் 4,164 பில்லியன் ரூபாய் வருவாயை எதிர்பார்க்கிறது. இது 2023ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42 சதவீத
அதிகரிப்பு ஆகும்.
இருப்பினும், வரவு செலவு அறிக்கையின் நிலை 14 சதவீத பற்றாக்குறையுடன் 3,570
பில்லியன் ரூபாயாக மட்டுமே உள்ளது.
உலகிலேயே அதிக வட்டி – செலவு – வருவாய் விகிதத்தை இலங்கை கொண்டுள்ளது.
ஏழு உயிர்களை காவு கொண்ட கோர விபத்து! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி தகவல்
பொருளாதார மீட்சித் திட்டம்
மேலும், இந்த
விகிதத்தை குறைப்பது, பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கு
முக்கியமானதாகும்.
இதன்படி, 2024ஆம் ஆண்டின் பாதீடு, இந்த விகிதத்தை 64 சதவீதமாக குறைக்க
எதிர்பார்க்கிறது.
எவ்வாறாயினும், இந்த விகிதம் கடந்த சில ஆண்டுகளில் இருந்ததைப் போலவே 70சதவீதத்தினை தாண்டும்.
எனவே, பொருளாதார வல்லுநர்கள் கடன் நிலைத்தன்மையின் முக்கியமான குறிகாட்டியாக கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய பொருளாதார மீட்சித் திட்டத்தில்,
இலங்கை வீழ்ச்சியடையும்” என சுட்டிக்காட்டியுள்ளது.
மாட்டுப் பண்ணையாக மாறிய சர்ச்சையை ஏற்படுத்திய ராஜபக்சர்களின் மாளிகை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |