Home இலங்கை அரசியல் விவசாய அமைச்சு தொடர்பில் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்

விவசாய அமைச்சு தொடர்பில் வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்

0

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்ச்சியாக இன்றும் (12) இடம்பெறுகின்றது.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் (Ministry of Agriculture, Livestock, Land and Irrigation)  செலவினத் தலைப்புக்களின் கீழ் இன்று குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விவாதம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் 118, 281, 282, 285 முதல் 289 வரையும் தலைப்புக்கள் 292 மற்றும் 327ஆகிய தலைப்புக்களின் கீழ் நடைபெறவுள்ளது.

மாலை 6.00 முதல் 6.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான ஆளுங்கட்சியின் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/4epZuj5D6Rg

NO COMMENTS

Exit mobile version