Home இலங்கை பொருளாதாரம் அரச நிறுவனங்களிடம் கோரப்படும் அறிக்கை! நிதியமைச்சு அறிவிப்பு

அரச நிறுவனங்களிடம் கோரப்படும் அறிக்கை! நிதியமைச்சு அறிவிப்பு

0

அரச நிறுவனங்களின் வரவு – செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையை தயாரிக்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்காரணமாகவே அனைத்து அரச நிறுவனங்களின் வரவு – செலவு அறிக்கைகளை கோர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வரவு–செலவு அறிக்கை

அதற்கமைய மதிப்பீட்டு அறிக்கைகளை கோரும் நடவடிக்கைகளும் அதே சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படுமென அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.    

NO COMMENTS

Exit mobile version