எதிர்க்கட்சியினர் நேரடியாக அல்லாமல் இரகசியமாக இன்றும் கேட்பது தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரமாகும் என தேசிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார் தொடர்ந்து பேசிய அவர்,
தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம்
கடந்த காலங்களில் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டு விற்பனை செய்தவர்களே அதிகம். இவர்கள் சுற்றிவளைத்து கோருவது பணம் தான். இது தான் உண்மையான கதையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரிய வேலைகள் செய்ய செய்ய வேண்டியுள்ளது. அதற்கு இந்த வாகனங்கள் வழங்கியமை ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும். எதிர்க்கட்சியில் ரஞ்ஜித் மத்தும பண்டார கூட இந்த வாகனங்கள் எங்களுக்கு கிடைக்காத? இதை தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரமாக வழங்கக்கூடாத என்கிறார்.
தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கல் நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கிழைப்பதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
