கிணற்றில் சுற்றி சற்றி ஓட்டிய மோட்டார் சைக்கிளோட்டம் போன்றதே அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும் என நாடளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஐந்தாவது நாள்) விவாதத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
திருவிழா காலங்களில்
“திருவிழா காலங்களில் கிணற்றில் அல்லது கிடங்கு போல் அமைக்கப்பட்ட இடத்தில் மோட்டார் சைக்கிள் மிகச் சத்தமாக ஓட்டப்படும். அந்த கிடங்கின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் மக்கள் நின்று பார்வையிடுவர்.
அரசின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது, அந்த மோட்டார் சைக்கிளோட்டமே ஞாபகத்திக்கு வந்தது.
கிணற்றில் அல்லது கிடங்கில் மோட்டார் சைக்கிளை மிக சத்தமாக ஓட்டுவர்.
அதை இரசித்துக் கொண்டிருக்கும் மக்கள் அது முடிந்த பின்னர், எவ்வளவு சத்தமாக மோட்டார் சைக்கிள் ஓட்டினாலும் ஒரே இடத்திலேயே சுற்றியுள்ளது என பேசுவர். அவ்வாறு இந்த பாதீடும் பெரும் சத்தத்துடன் சமர்ப்பித்தாலும் ஒரே இடத்திலேயே சுற்றியதாகவே தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
