நடிகர் தினேஷ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் தினேஷ்.
அதன்பின் பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே 2, கார்த்திகை தீபம், கிழக்கு வாசல் என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார். 2023ம் ஆண்டு பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு விளையாடியவர் கடைசி வரை நிகழ்ச்சியில் வந்தார்.
திருமணம் எனும் நிக்கா படத்தில் மட்டும் நடித்திருந்தார். இவர் பிரபல சிரியல் நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள்.
கைது
இந்த நிலையில் நடிகர் தினேஷ் குறித்து ஒரு அதிரடி தகவல் வந்துள்ளது.
அதாவது நெல்லை பணகுடியைச் சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 லட்சம் வாங்கிவிட்டு மோசடி செய்த புகாரில் நடிகர் தினேஷ் கைதாகியுள்ளார்.
2022ம் ஆண்டு பணம் வாங்கிவிட்டு வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்கச் சென்ற பெண்ணின் தந்தையை கம்பால் அடித்து மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணின் தந்தை புகார் கொடுக்க போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
