கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவராக கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை வரலாற்றில், ஒரு தமிழர் தலைவராக தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
திருகோணமலை சம்பூரை பிறப்பிடமாகக் கொண்ட அவர், தனது வாழ்நாளில் வெற்றிக்கு முன்னர் சந்தித்த போராட்டங்கள் தொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1983ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் நிலைமை தலைகீழானதால் ஆசிரியர்கள் மற்றும் வகுப்புக்கள் இன்றி கஷ்டப்பட்டதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், ‘வரையறுக்கப்பட்ட வளங்களை உச்ச அளவில் பயன்படுத்துவது’ என்ற பொருளியல் கூற்றின் படி, நாங்கள் செயற்பட்டு முன்னேறினோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்க்கை வரலாற்றை மேலும் விவரிக்கையில்,
