Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி பண்ணை நுவரெலியாவில்

இலங்கையின் முதலாவது ஸ்ட்ரோபெரி பண்ணை நுவரெலியாவில்

0

இலங்கையின் முதலாவது ஸ்ட்ராபெரி சாகுபடி மாதிரிக் கிராமத்தை நுவரெலியாவில்(Nuwara Eliya
) நிறுவுவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதல் கட்டமாக  நுவரெலியாவில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு, ஸ்ட்ராபெரி செடிகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் மற்றும் நீர் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு ஒரு விவசாயிக்கு தலா 13 இலட்சம் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தானியங்கி முறை

இதில் 750,000 ரூபா விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவதோடு, மீதமுள்ள 6 இலட்சத்தை அந்தந்த விவசாயிகள் முதலீடு செய்ய வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஸ்ட்ராபெரி திட்டத்திற்கு 40 பாதுகாப்பான பச்சை வீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வீடுகள் அனைத்தையும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படுத்த முடியும் என்றும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈரான் தொடர்பில் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து

ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version