Home முக்கியச் செய்திகள் கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு : வெளியான காரணம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு : வெளியான காரணம்

0

அம்பாறையிலிருந்து (Ampara) கொழும்பு (Colombo)  நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இங்கினியாகல காவல்துறை பிரிவிக்கு உட்பட்ட தெவாலஹிந்த பிரதேசத்தில் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பேருந்து சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

கொழும்பு நோக்கி புறப்பட்ட பேருந்து

பின்னர், பயணிகள் உடனடியாக சாரதியை இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சாரதி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதாவது நேற்று (23) இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கி குறித்த பேருந்து புறப்பட்டுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இங்கினியாகல பல்கலைக்கழகத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு அங்குள்ள தனியார் சிகிச்சை நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

சாரதி உயிரிழப்பு 

சுகவீனம் அதிகமாக இருப்பதால் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என வைத்தியர் அறிவுறுத்திய போதும் வேறு சாரதி இல்லை எனக் கூறி பேருந்தை கொழும்பு நோக்கி செலுத்தியுள்ளார்.

இருப்பினும், மருத்துவரை சந்தித்து 10 மைல் செல்வதற்கு முன்னரே, சாரதி மீண்டும் நோய்வாய்ப்பட்டதால், பேருந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்த போதிலும், ஒரு பயணிக்கு மட்டுமே சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உயிரிழந்த சாரதி பரகஹகெலே பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version