அநுராதபுரம், கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்தில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, கடற்படையின் படகு மூலம் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் ஒரு பேருந்து சிக்கியுள்ளது.
இந்த பேருந்து ஒன்றரை மணி நேரமாக அந்த இடத்தில் நிற்பதாகவும் போதியளவு மீட்பு குழுவினர் எவரும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
