Home இலங்கை சமூகம் பேருந்து ஊழியர்கள் போராட்டம் : கல்முனை நகரில் பதற்றநிலை

பேருந்து ஊழியர்கள் போராட்டம் : கல்முனை நகரில் பதற்றநிலை

0

கல்முனை நகரத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் இன்று (13.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை
வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும்
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை
ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பேரூந்து
ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து.

இதன்போது
இரு தரப்பினர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்திருந்தனர்.

இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இ.போ.சபை ஊழியர்கள்
சிலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
குற்றச்சாட்டுக்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன்
போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்து
தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளனர்.

இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார்
பேருந்துகளும் வீதியின் இரு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் சம்பவ
இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார்
சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version