Home விளையாட்டு ரி 20 உலக கோப்பை:ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி

ரி 20 உலக கோப்பை:ஸ்காட்லாந்து அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி

0

உபாதை காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரோ ஆர்ச்சருடன் இணைந்த 11 கொண்ட இங்கிலாந்து அணி இன்றைய தனது முதல் உலகக்கிண்ண ரி 20 போட்டியில் விளையாடவுள்ளது.

குறித்த போட்டியானது மேற்கிந்திய தீவுகளின் கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற உள்ளது.

ரி20 போட்டிகளின் பல்வேறு முன்னணி வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ள இங்கிலாந்து அணி  (England cricket team)இன்றைய (4) முதல்நாள் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை (Scotland  cricket team) எதிர்த்தாடவுள்ளது.

ஸ்காட்லாந்து அணி

இதன்படி, போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஸ்காட்லாந்து அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

ரி20 தரப்படுத்தலில் முன்னணி வீரர்களாக கருதப்படும் துடுப்பாட்ட வீரர்களான பிலிப் சோல்ட், ஜோஷ் பட்லர், வில் ஜேக்ஸ், ஜோனி ப்ரஸ்ட்ரோ சகலதுறை வீரர்களான லைம் லிவிங்ஸ்டன், மெயின் அலி மற்றும் பந்துவீச்சாளரான ஜோப்ரோ ஆர்ச்சர் ஆகியோரை கொண்ட பலம்வாய்ந்த அணியாக இங்கிலாந்து அணி காணப்படுகிறது.

ஸ்கொட்லாந்து மற்றும் இரண்டு அணிகளும் சர்வதேச t 20 கிரிக்கெட் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.

Source: https://ibctamil.com/article/world-t20-match-2024-england-vs-scotland-1717513375

NO COMMENTS

Exit mobile version