Home இலங்கை குற்றம் இளம் கோடீஸ்வரர் கொலை – சிக்கிய பாடசாலை மாணவன்

இளம் கோடீஸ்வரர் கொலை – சிக்கிய பாடசாலை மாணவன்

0

புத்தளம், கட்டுனேரிய பகுதியில் கோடீஸ்வர தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிரிகம்பள பகுதியில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு தண்ணீர் வரும் குழாயில் தொழிலதிபரின் உடலை மறைத்து வைத்ததற்காக சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொலையில் முக்கிய சந்தேக நபர்

19 வயது மெக்கானிக் மற்றும் அவரது 15 வயது தம்பி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

15 வயது சகோதரன் மாரவில பிரதேசத்தில் உள்ள உள்ள பிரபலமான பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். 

கோடீஸ்வர தொழிலதிபரின் கொலையில் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படும் 20 வயது இளைஞரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவனும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version