Home உலகம் உடனடியாக வெளியேறுங்கள் – ஈரான் அரசு அதிரடி உத்தரவு

உடனடியாக வெளியேறுங்கள் – ஈரான் அரசு அதிரடி உத்தரவு

0

ஈரான் (Iran) நாட்டில் வசிக்கும் ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகளை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அவசர உத்தரவானது ஈரானிய அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த பெருமளவிலான வெளியேற்றம் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானை (Afghanistan) மேலும் சீர்குலைக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் கைது

இந்நிலையில், சுமார் 4 மில்லியன் ஆப்கானிய குடியேறிகள் மற்றும் அகதிகள் தற்போது ஈரானில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

700,000 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஏற்கனவே ஈரானை விட்டு வெளியேறிவிட்டதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.  

இதேவேளை, தங்கள் நாட்டில் இந்த உத்தரவை பின்பற்றாத அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று ஈரானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version