Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு துறைமுக நகரத்தில் அதிகரிக்கப்படவுள்ள வர்த்தக நிறுவனங்கள்

கொழும்பு துறைமுக நகரத்தில் அதிகரிக்கப்படவுள்ள வர்த்தக நிறுவனங்கள்

0

Courtesy: Sivaa Mayuri

கொழும்பு துறைமுக நகரத்தில் இதுவரை 65 நிறுவனங்கள்,தமது வர்த்தகத்தை பதிவு செய்துள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் அதனை 100 நிறுவனங்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கான வங்கி விதிமுறைகள் எதிர்வரும் ஜூலை இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் 

இதுவரை பல்வேறு தனியார் நிறுவனங்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் தமது வர்த்தகங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு

இதன் மூலம் எதிர்வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை, அந்த நிறுவனம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை முதன்மையாக சேவை நிறுவனங்கள், வணிக செயல்முறை, மூன்றாம் தரப்பு (அவுட்சோர்சிங்) நிறுவனங்கள், அறிவு செயலாக்க அவுட்சோர்சிங் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பன மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகர வர்த்தகத்திக் கீழ் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version