Home இலங்கை குற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது!

0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்து வர முயற்சித்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (21.12.2025) குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அவிசாவளை, எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

கைது

சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் 03 பெட்டிகளுக்குள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ‘பிளாட்டினம்’ வகையைச் சேர்ந்த 42,000 சிகரெட்டுகள் அடங்கிய 210 சிகரெட் காட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சிகரெட் தொகை விமான நிலைய அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 63 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version