Home இலங்கை அரசியல் டக்ளசுடன் சேர்ந்த சி.வி.கே மற்றும் பலருக்கு செம்மணியில் நேரடியாக பகிரங்க எச்சரிக்கை!

டக்ளசுடன் சேர்ந்த சி.வி.கே மற்றும் பலருக்கு செம்மணியில் நேரடியாக பகிரங்க எச்சரிக்கை!

0

சில தமிழ் அரசியல்வாதிகள் தமது கட்சி அரசியலுக்காகவும் வாக்கு அரசியலுக்காகவும் அணையா விளக்கு போன்ற தமிழர்களுடைய உரிமை போராட்டங்களை பயன்படுத்துவதாக வேலன் சுவாமிகள் (Velan Swamigal) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நேற்று(24) நடைபெற்ற அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”ஒற்றுமை என்ற பெயரில் நாம் யாருடனும் எந்த கட்சிகளுடனும் சேர்ந்துவிட முடியாது.

உள்நாட்டு போர் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழின அழிப்பிற்கு துணை போன ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு இங்கு இந்த போராட்டத்தில் அமர்ந்திருப்பது நியாயமில்லை.

அதுமட்டுமன்றி இளையவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அணையா விளக்கு போராட்டத்திற்கு உரிமை கோருவதும் தமது பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.”என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version